உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள கோர்க்கா மையத்தில் பயிற்சி முடிந்து, நம் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவுள்ள அக்னிவீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
ஆசிய விளையாட்டு கலப்பு அணிகளுக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது; மூவர்ணக்கொடியுடன் வெற்றியை கொண்டாடிய வீரர்-வீராங்கனையர். இடமிருந்து: மானு, பூவம்மா, விஷால், வித்யா. இடம்: நகோயா நகரம், ஜப்பான்.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான மகேந்திர சிம்ஹன் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ நீதிமன்றம் அழைத்து வந்தனர். இடம்: சென்னை உயர் நீதிமன்றம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.
முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்