திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பன்னீர் ஊத்து கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி தண்ணீர் வயலுக்குள் புகுந்ததால் சேதமடைந்துள்ள மக்காச்சோள பயிர்கள்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் நடந்த போரில், காசாவில் பல வீடுகள் கொள்ளைடிக்கப்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர். பலர் இறந்துள்ளனர். இது பற்றி தகவல் சேகரிக்கவும், உண்மை நிலையை அறியவும் செஞ்சிலுவை சங்கத்தினர் முதல் முறையாக அங்கு சென்றுள்ளனர்.
எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நவீன ஆயுதத்தை எடுத்து சோதித்து பார்த்த இளம்பெண். இடம்: அகர்தலா, திரிபுரா.
டிட்வா புயலால் பெய்த மழைநீர் வெளியேறாமல் வீடுகளை சுற்றி தேங்கியிருப்பதால், மக்கள் படகில் செல்லும் நிலை உள்ளது. இடம்: தங்கச்சிமடம் ராஜா நகர், ராமநாதபுரம் மாவட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, சிவச்சாரியார்களால் ராஜகோபுர கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர்.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஆற்றுப்பாலம் இரண்டாக உடைந்தது. ஆற்றை கடக்க முடியாமல் சேதம் அடைந்த பாலத்தில் தவித்த மக்கள்.