85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலர்கள் அளித்து, பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டனர். இடம்:ராயப்பேட்டை.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பணிகள் நடந்து வருகிறது.
சென்னை மண்ணடியில் 100 மீட்டர் தூரத்தில் வாக்குச்சாவடி மையம் உள்ளது என்பதை வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் வகையில், சாலையில் பெயின்ட் மூலம் எழுதும் மாநகராட்சி ஊழியர்கள்.இடம்: பவளகாரத் தெரு.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு செயல்பாட்டினை தேர்தல் அலுவலர் பிரசாந்த் மற்றும் பொதுப் பார்வையாளர் சுச்சி தியாகி ஆய்வு செய்தனர்.