டிட்வா புயலால் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் பாம்பன் மீனவர்களுக்கு தடை விதித்திருந்தனர். தற்போது மழை குறைந்த நிலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 110 வது வார்டில் சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சிற்றரசுவின் அலுவலகத்தின் முன்பு மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 2ம் கொண்டை ஊசி வளைவில் இருந்து நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்பட்ட அலுமினிய எச்சரிக்கை பலகைகள் சமூக விரோதிகளால் திருடி செல்லப்பட்டுள்ளன.