சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, திருமுல்லைவாயில், செந்தில் நகர், காமராஜர் தெருவில் உள்ள வீட்டுக்குள் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் ஓடி விளையாட முடியாத பாப்பா, கட்டிலே கதி என்று அமர்ந்துள்ளது.
டிட்வா புயலால் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் பாம்பன் மீனவர்களுக்கு தடை விதித்திருந்தனர். தற்போது மழை குறைந்த நிலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 110 வது வார்டில் சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சிற்றரசுவின் அலுவலகத்தின் முன்பு மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி