சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புழல் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் செங்குன்றம், புழல், மாதவரம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடம்: மாதவரம், சென்னை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.