உள்ளடக்கத்திற்கு செல்ல வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் ஆண்டுதோறும் ஹார்ன்பில் என்ற பெயரில் கலாசார திருவிழா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனங்கள், கலைநிகழ்ச்சிகள் அரங்கேறும். அங்கு நடந்த விழாவில், பழங்குடியின கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. இடம்:டுபெமா. 2/
எந்த சுமையா இருந்தாலும் என் மகள் சுமைதான் எனக்கு சுகமான சுமை என்கிறாரோ இந்த தாய். இடம்: புதுச்சேரி பாரதி வீதி 3/
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆச்சரியமாக படம் பிடித்து மகிழ்ந்தனர். 4/
பொள்ளாச்சி பகுதிகளில் காலை நேரத்தில் பனி அதிகரித்து இயற்கையின் ஓவியமாய் பிரதிபலிக்கிறது. 5/
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. 6/
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஜரூராக நடைபெற்றது. 7/
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் திருப்பணி நடந்து வரும் நவ நரசிம்ம பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைத்து சிறப்பு பூஜை நடந்தது. 8/
திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா மகாதீபத்தில் திரியாக பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி 3ம் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. 9/
திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள் காலை உற்சவத்தில், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். 10/
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined