சென்னையில் பெய்த மழையில் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. பூந்தமல்லி அருகே உள்ள பாரிவாக்கம் ஏரி நிரம்பி, உபரி நீர் செல்லும் கால்வாயில் சிலர் மீன் பிடித்தனர்.
சென்னை வில்லிவாக்கம் ஏரியில், கட்டப்பட்டு வரும் பசுமை பூங்காவின் முக்கிய அம்சமான கண்ணாடி பாலம் பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.
சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் அருகே வடக்கு நிழற்சாலையின் இருபுறமும் பஸ்கள், வேன்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 80 அடி சாலை 40 அடி சாலையாக குறுகியுள்ளது.