உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்து அரசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர்.
தாமிரபரணிக்குள் குப்பை...:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் பேரூராட்சியில் சேரும் அனைத்து குப்பைகளையும் கொட்டி, நீர், சூழல் மாசு ஏற்படுத்துகின்றனர்.