இடைவிடாத வாகன போக்குவரத்து காரணமாக, மழையில் நனைந்த படி சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளியை பார்த்த இந்த பெண்மணி, தன் குடையை அவருக்கு பிடித்து அவர் மழையில் நனையாமல் சாலையைக் கடக்க உதவி செய்தார். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், திண்டுக்கல்.
பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கல்வித்துறை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
தோள் கொடுக்கும் நண்பன் உதவிக்கு கால் கொடுப்பது தவறில்லை. இதில் தலைகவசம் சேர்த்து வழங்கினால் விபத்துக்கு அவசியம் இல்லையே. இடம்: கோவை தடாகம் ரோடு பால்கம்பெனி அருகே.
தை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வெண் பட்டு குடை சூழ ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர், பல்லடம் ரோடு பி.எப்., அலுவலகம் மண்டல அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டு திறப்பு நடந்தது. அதில் கோவை கூடுதல் மத்திய நிதி கமிஷனர் கஸாலா அலிகான் மரக்கன்று நட்டு வைத்தார்.