திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்லும் சாலை சகதியாக இருந்தது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சகதியாக இருந்த சாலையில் ஜல்லி கொட்டி சமன் செய்யப்பட்டது.
ஊட்டியில் கடுமையான குளிர் நிலவுகிறது. இருந்தாலும் இந்த குளிரை அனுபவிக்க சுற்றுலா பயணியர் வருகின்றனர். அங்கே உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான சூட்டிங்மட்டம் என்ற இடத்தில் காட்சிகளை ரசிக்க வந்த மக்கள்.
இடைவிடாத வாகன போக்குவரத்து காரணமாக, மழையில் நனைந்த படி சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளியை பார்த்த இந்த பெண்மணி, தன் குடையை அவருக்கு பிடித்து அவர் மழையில் நனையாமல் சாலையைக் கடக்க உதவி செய்தார். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், திண்டுக்கல்.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஓடும் யமுனை நதியை பெண் தெய்வமாக கருதி, ஆண்டிற்கு ஒரு முறை பல வண்ண புடவைகளால் அலங்கரித்து அப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம். 'சூன்ரி மனோரத் சேவா' எனப்படும் இந்த விழாவிற்காக, 200க்கும் அதிகமான புடவைகள் பயன்படுத்தப்பட்டன.