ஊட்டி அருகே உள்ள பைக்காரா ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 100 அடியை எட்ட உள்ளதால், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.
எல் நினோ தாக்கத்தால் கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழங்கள் வாங்குகிறோம்.. ஆனா அந்த பழங்களை விற்க பாட்டி உச்சி வெயிலேயே சமாளிக்கிறாங்க! இடம்: கோவை, பெரிய கடைவீதி
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நன்மங்கலம் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது
விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ராமையம் பாளையம் அருகே தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.