sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தமிழக கடலோர பகுதிகளில் கடந்தாண்டு ஆயிரக்கணக்கில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின . இதற்கு மீன்பிடி வலைகள், விசைப்படகுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்களாக கூறப்படுகிறது. சமீப காலமாக மீண்டும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை.
10-Dec-2025

ShareTweetShareShare

2/

தூக்கமின்மை என்பது பலருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. அதிலும், வயதானவர்கள் நல்ல தூக்கத்திற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மையம் ஒன்றில் மெல்லிய இசைக்கருவிகளை எழுப்பி தூங்க வைக்கின்றனர்.
10-Dec-2025

3/

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாகஉதவி வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது பிங்க் பெட்ரோல் போலீஸ் வாகனம். இதில் ஓட்டுபவர் முதல்சிறப்பு உதவி ஆய்வாளர் வரை அனைவரும் பெண்களாக இருப்பர். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனங்களில் அதிகாரிகள் வலம் வருவர். பெண்களும் தயக்கமின்றி இவர்களிடம் புகார் தருவர். அந்த வாகனத்தை ஓட்டுபவரும், அதில் பயணிப்பவரும் ஆண்களாகவே இருந்தனர். இது பிங்க் பெட்ரோல் வாகனத்தின் அசல்நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளதே. இடம்: கோவை காந்திபுரம் காவல்நிலையம்
10-Dec-2025

4/

கோவை காந்திபுரத்தில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டசெம்மொழிப்பூங்காவை நாளை( டிச.,11) பொது மக்கள் பார்வையிடலாம். பூங்காவில் இடம்பெற்றுள்ள பட்டாம்பூச்சி சிற்பம்.
10-Dec-2025

5/

சென்னை அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் தேங்கியிருந்த மணல் திட்டுகளை தூர்வாரி தண்ணீர் செல்ல வழி செய்யும் பணி நீர்வளத்துறை சார்பில் நடந்தது. தற்போது அந்த பகுதி முழுவதும் தூர்வாரப்பட்ட எவ்வளவு மழை வந்தாலும் கடலுக்குள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இடம்: பட்டினப்பாக்கம்.
10-Dec-2025

6/

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடந்த சென்னை வானகரம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
10-Dec-2025

7/

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள். இடம்: வானகரம், சென்னை
10-Dec-2025

8/

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
10-Dec-2025

9/

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த அக்கட்சியின் பொதுசெயலாளர் பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் முண்டியடுத்து சென்றதால் நுழைவு வாயிலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இடம்: வானகரம், சென்னை.
10-Dec-2025

10/

செம்மொழி பூங்கா வேலை முடியாமல், இன்னும் மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக கோவை காந்திபுரத்தில் வேலை பார்க்கின்றனர்.
10-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us