தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாகஉதவி வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது பிங்க் பெட்ரோல் போலீஸ் வாகனம். இதில் ஓட்டுபவர் முதல்சிறப்பு உதவி ஆய்வாளர் வரை அனைவரும் பெண்களாக இருப்பர். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனங்களில் அதிகாரிகள் வலம் வருவர். பெண்களும் தயக்கமின்றி இவர்களிடம் புகார் தருவர். அந்த வாகனத்தை ஓட்டுபவரும், அதில் பயணிப்பவரும் ஆண்களாகவே இருந்தனர். இன்று( டிச.,10) இது பிங்க் பெட்ரோல் வாகனத்தின் அசல் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளதே. இடம்: கோவை காந்திபுரம் காவல்நிலையம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழையால் பஸ்தர் மாவட்டம் ஜக்தல்பூர் பகுதியில் உள்ள என்எச் 30 தேசிய நெடுஞ்சாலையில் ஆறுபோல் ஓடும் மழை நீரில் தத்தளித்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்துள்ளாதல் சிறுவர் பூங்கா சுற்றுச்சுவர், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சேதம் அடைந்துள்ளன.
சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இனிப்புகள் உள்ளிட்ட 5 ஆயிரம் கிலோ பொருட்கள் தோரணமாக தொங்கவிடப்பட்டு நிறைமணி காட்சியுடன் அருள்பாலித்த அம்மன்.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள துபரே முகாமில் கடந்த மே மாதம் இரு யானைகள் மோதிக்கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த பெண் பலியானார். இதையடுத்து மாநிலம் முழுவதும் யானைகள் முகாம்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. முகாம்கள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து ஷிவமொக்காவில் உள்ள சக்ரேபைலு முகாமில் யானையை உற்சாகமாக குளிப்பாட்டிய பாகன்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பாய்மரப் படகு போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற படகுகள்.
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையர்-வீரர்கள் தேசியக்கொடியை பிடித்தபடி வெற்றியை கொண்டாடினர்.