சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செல்லும் மழை நீர் கால்வாயில் இருந்து அவ்வப்போது மேன்ஹோல் வழியாக தண்ணீர் வெளியேறி குளம் போல் தேங்குகிறது. இதனால் மாணவ- மாணவியர் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. சாலையில் மலைபோல் பனி குவிந்து இருப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் போக்குவரத்து முடங்கியுள்ளன.
தேஜ கூட்டணியை விமர்சித்து தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இடம்: ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் உள்ளதா என்று போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்த் பார்வையிட்டார்.