மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் பழுதடைந்ததால், அதை இடித்து அகற்றும் பணி தொடங்கி நடக்கிறது. ராட்சத கிரேன்களின் உதவியுடன் நடக்கும் பணியால் மேம்பாலத்துக்கு கீழே ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.