விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை தேசிய நெடுஞ்சாலை பணி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது மீண்டும் சாலை அமைக்கும்படி துவங்கியுள்ளது. இடம்: வடக்குத்து வடலூர் கடலூர்.
கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள வையாபுரி விநாயகர் கோவில் குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இடம்: ஈஞ்சம்பாக்கம்.
சென்னை நகரில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் அதிகம் பரவி வரும் நிலையில் கூவம் ஆறு உள்ளிட்ட கால்வாய்களில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில், ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இடம்: கூவம் ஆறு, பூங்கா ரயில் நிலையம் அருகில்.
திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் 67-ம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு பகவான் ஸ்ரீராமரின் விசேஷ குணங்கள் என்ற தலைப்பில் ஸ்ரீராஜாராமன் சொற்பொழிவாற்றினார்.