டெம்போ டிராவலரில் அமர்ந்தபடியே சாலையின் நீளத்தை அளக்கும் உபகரணத்தை பயன்படுத்தி அலட்சியமாக சாலையின் நீளத்தை அளக்கும் ஊழியர். இடம்: கடலூர் பண்ருட்டி சாலை மேல் பட்டாம்பாக்கம் அருகே
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகை அருகே உள்ள மேம்பாலத்தில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவைப்புதூர் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.