கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி, பாஜ வரலாற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 101 வார்டுகளில், 50 இடங்களில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் பதவியேற்றனர். வரும் 26ம் தேதி மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
மதுரை ட்ரீம்ஸ் பவுண்டேஷன் அஸ்வின் மருத்துவமனை இணைந்து எஸ். பி. ஜே. மெட்ரிக் பள்ளியில் நடத்திய குழந்தைகளுக்கான சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரவிந்த் ஐ கேர் நிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜனா பங்கேற்றனர். அருகில் டாக்டர்கள் ஆனந்தகுமார், ஜெயசித்ரா, உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், பள்ளி நிர்வாகிகள் ஜெயராஜ், பழனிச்சாமி.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 101 வது பிறந்தநாள் விழா ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ மைதானத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அகில உலகிலும் சாந்தியும் அமைதியும் தழைத்தோங்கச் செய்யும் உயரிய நோக்கில் ஸ்ரீ சத்ய சாய் உலக அமைதிக்கான ஒன்பது ஜோதிகள் சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர்களால் மங்களகரமாக ஏற்றி வைக்கப்பட்டன