சத்ய சாய்பாபாவின் அருளை கூறும் அனந்தா வெப் சீரிசின் டீசரை, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சென்னயில் வெளியிட்டார். உடன் இடமிருந்து, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, டாடா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி, டாபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன், ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர், திரைப்பட இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா ஆகியோர்.இடம்: நுங்கம்பாக்கம்.
திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் 67-ம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு பகவான் ஸ்ரீராமரின் விசேஷ குணங்கள் என்ற தலைப்பில் ஸ்ரீராஜாராமன் சொற்பொழிவாற்றினார்.
பச்சை மலையரசியின் மடியில் வெள்ளை மேகங்கள் தவழ்ந்து, உரையாடி முத்தமிட்டுச் செல்லும் இயற்கையின் காதல் காவியமாக மலையைத் தழுவும் மேகங்களின் அழகு பரவசப்படுத்துகிறது. இடம்: கோத்தகிரி, நீலகிரி.
எவ்வளவு வறுமை வாட்டியிருந்தால், லாரியில் கொண்டு செல்ல வேண்டிய சுமையை முகமே தெரியாத அளவுக்கு இப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றிருப்பார் இந்த பெண். இடம்: கோவை உக்கடம்.