கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உலகப்புகழ் பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிஷாவின் புரி கடற்கரையில் சாண்டா கிளாசின் பிரமாண்ட மணல் சிற்பத்தை, மணலுடன் இயற்கை வண்ணங்களையும், மலர்களையும் பயன்படுத்தி அமைத்துள்ளார்.
கோவை மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், பி-டிவிஷன் கால்பந்து போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன. இதில் அசோகா கால்பந்து அணி மற்றும் பெனிவெலன்ஸ் கால்பந்து அணிகள் மோதின.
ராணி வேலுநாச்சியார் நினைவு நாள் முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு டில்லியில் இன்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இப்போதே களைகட்ட துவங்கி விட்டது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்முவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வலியுறுத்தியும் அணிவகுத்த பள்ளி மாணவர்கள்.