நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இப்போதே களைகட்ட துவங்கி விட்டது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்முவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வலியுறுத்தியும் அணிவகுத்த பள்ளி மாணவர்கள்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.