சென்னை கோயம்பேடு சந்தையில் ஓரளவு கெட்டுப்போன ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை வியாபாரிகள் தூக்கி எறிந்துள்ளனர். மலை போல குவிந்து கிடக்கும் அவற்றில் இருந்து பயோ காஸ் எனப்படும் உயிரி எரிவாயு தயாரிக்க முழுவதும் கெட்டுப்போகாத பழங்களை பிரித்தெடுக்கும் ஒப்பந்த ஊழியர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.