ராணிப்பேட்டை மாவட்டத்தின் வரலாறு சின்னமாகவும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் மகேந்திரவாடி ஏரி தற்போது கடல் போல காட்சி அளிப்பதோடு அதன் உபரி நீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த உபரிநீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.