sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, மேற்கு வங்க மாநில காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் படம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இடம்: கொல்கட்டா, மேற்குவங்கம்.
28-Dec-2025

ShareTweetShareShare

2/

மாமல்லபுரத்தில் சூரியன் உதயமாகி வானில் உயர்ந்த போது, கடற்கரை கோவில் கோபுர தீபமாக காட்சியளித்தது. இதை சுற்றுலா பயணியர் ரசித்தனர்.
28-Dec-2025

3/

விடுமுறை தினத்தையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
28-Dec-2025

4/

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். இடம்: கோயம்பேடு, சென்னை
28-Dec-2025

5/

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் வீசும் ஜோஹன்னஸ் பனிப்புயலால் அந்நாட்டில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொட்டும் பனிப்பொழிவில் தன் குழந்தையுடன் வீடு திரும்பிய தாய். இடம்: ஆரே ரயில் நிலையம்.
28-Dec-2025

6/

விடுமுறைக்காலம் என்பதால், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
28-Dec-2025

7/

சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் 359வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
28-Dec-2025

8/

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் அறுவடைக்கு பிந்தைய காலத்தில் நடத்தப்படும் பாரம்பரிய வீர விளையாட்டு கம்பாலா. சேறும், சகதியுமான பந்தய களத்தில் நடத்தப்படும் இந்த போட்டியில் வீரர்கள், எருதுகளுடன் அவற்றுக்கு இணையான வேகத்திற்கு ஓடி இலக்கை அடைவர். பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நிகழ்வு, மங்களூரு அருகே நடந்தது.
28-Dec-2025

9/

ராணிப்பேட்டை மாவட்டத்தின் வரலாறு சின்னமாகவும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் மகேந்திரவாடி ஏரி தற்போது கடல் போல காட்சி அளிப்பதோடு அதன் உபரி நீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த உபரிநீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
28-Dec-2025

10/

திருப்பூரில், திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை,கலா விருஷா நிருத்ய கான சபா சார்பில் மார்கழி நிருத்ய கான உற்சவம் வீரராகவ பெருமாள் கோவிலில் கம்பராமாயணம் வரலாற்று நாட்டிய நடன நிகழ்ச்சி நடந்தது.
28-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us