திருவொற்றியூர் மண்டலத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்குவதற்காக குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இடம்: மாட்டு மந்தை மேம்பாலம் அருகே.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் போது, பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரை சேர்க்க காத்திருந்தோர். இடம்: கொல்கட்டா.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில, பறவைகள் இளைப்பாற வசதியாக, குட்டி தீவு போல் மாற்றியுள்ளது வனத்துறை. பறவைகள், மரங்கள் மற்றும் செடிகளுக்காக பள்ளம் தோண்டி தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது. இடம்: எல்காட் சாலை அருகே, சோழிங்கநல்லூர்.
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க, 75வது ஆண்டு பூஜா மஹோத்ஸவ விழாவில் கேரளாவிலுள்ள புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோவிலில் இருந்து வருகை தந்த யானைகள் திருவாபரணம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமியுடன் பக்தர்களிடையே திருவீதி உலா வந்தது.