சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி தொடர்ந்து 5ம் நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இடம்: மெரினா காமராஜர் சாலை, சென்னை.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், திருச்சியில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், கூட்டமைப்பு சார்பில் 10 அம்சகோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் ஸ்ரீமத் பாகவத புராண உபதேசம் நிகழ்த்திய தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
புதுச்சேரி பெத்தி செமினார் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடந்த புதிய கட்டட திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
தி.மு.க. தேர்தல் அறிக்கை 181ஐ நிறைவேற்றி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிறப்பு ஆசிரியர்கள் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.