இன்றைய போட்டோ

ஹைதராபாத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி கோலாட்ட ஊர்வலத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் பங்கேற்று மற்றவர்களுடன் சேர்ந்து ஆடினார். இந்த புனித நாளில், பாரம்பரிய உடைகளில் இருந்த ஹிந்துப் பெண்களுடன் புர்கா அணிந்த முஸ்லிம் பெண் ஆடியது சமூக ஒற்றுமையையும், கலாசாரப் பரிமாற்றத்தையும் பறைசாற்றுவதாக இருந்தது.
31-Dec-2025

2/
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. 'ரெங்கா… ரெங்கா...' கோஷம் விண்ணைப் பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, வேத விற்பன்னர்களின் மந்திர முழக்கங்களுடன் நம் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
31-Dec-2025
3/
இன்றைய போட்டோ30-Dec-2025

4/

5/

6/

7/
திருப்பூரில் நடந்த திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க அக்கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழி, திமுக எம்பிக்கள் தமிழச்சி, கனிமொழி சோமு ஆகியோர் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றனர். அப்போது அதே விமானத்தில் பயணித்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசையுடன் புகைப்படம் எடுத்ததை, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.
30-Dec-2025

8/
வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பீஹாரிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு சில ரயல்களே இயக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. ரயிலில் ஏற காத்திருந்த பயணியர். இடம்: பாட்னா.
30-Dec-2025

9/
10/

