திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியில், மாநகராட்சியால் அகற்றப்படாத குப்பை தீ பற்றி எரிந்தது. அப்பகுதி மக்களுக்கு தீயணைக்கும் கருவி மற்றும் பொது கூட்ட நோட்டீஸ் வழங்கிய பா.ஜ.கட்சியினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..