திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பொது கூட்டம் பாண்டியன் நகரில் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நினைவு பரிசு வழங்கிய கட்சியினர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பொது கூட்டம் பாண்டியன் நகரில் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு கை கொடுக்க திரண்ட கட்சியினர்.
தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டி கோவை சின்னவேடம்பட்டி எஸ்.என்.எஸ்., அகாடமியில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டம் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் பரிசு வழங்கினார்.
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டியில் தேர்வு பெற்று பரிசுகள் பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) ஸ்போர்ட்ஸ் லேண்ட் உரிமையாளர் நவீன் ஜான், சத்யா ஏஜன்சி பொதுமேலாளர் ஆபிரகாம், சம்பூர்ணம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பொதுமேலாளர் இளையராஜா உள்ளிட்டோர்.