மேற்குவங்கத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுகாதாரத்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆஷா சுகாதார பணியாளர்கள். இடம்: கொல்கட்டா.
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கழிப்பறை கதவு கழன்று 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அப்படியே வைத்துள்ளனர். சரிசெய்ய ஆள் கிடைக்க வில்லையா, இல்லை ஆணி கிடைக்க வில்லையா.
தலைநகர் டில்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான போராட்டங்கள், அரசு தலைமைப் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பான கொண்டாட்டங்களால், பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24ல், அக் ஷர்தம் அருகே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.