தினமலர் நாளிதழ் மற்றும் தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், மார்கழி கோலத் திருவிழா செல்வபுரம் பிராவிடன்ட் கிரீன் பார்க் அப்பார்ட்மெண்டில் நடந்தது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை, வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், வீட்டின் முன் பிரம்மாண்டமான வண்ணக்கோலமிட்ட பெண்.
சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே
திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ - மாணவியர்கள் சார்பில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து கல்லூரியை சுற்றி வந்தனர்...