ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள ஏகம்ரா கானன் பூங்காவில் 'மலர் கண்காட்சி- 2026' கோலாகலமாக துவங்கியது. இதில், ஒடிஷாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், மலர்களால் உருவாக்கப்பட்ட புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை அலங்காரம், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வருவதை ஒட்டி சித்ரா பகுதியில் இருந்து வழிநெடுக்க ரோட்டோரத்தில் போடப்பட்டுள்ள தடுப்புகள்.
விழுப்புரம் தலைமை மின் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் வாரியத்தை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருங்களத்தூர் - மாதவரம் புறவழிச்சாலையில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், சாலை தடுப்புச் சுவரில் அமைக்கப்பட்ட செடிகளுக்குச் செம்மண் கொட்டி பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள்
கணக்கீட்டு பிரிவை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருப்பூர், பி.என்., ரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி சார்பில் சேம்பர் டே நிகழ்ச்சி சென்னையில் நடந்தது இதில், எம்சிசி-யின் 191-வது ஆண்டு லோகோ அறிமுகம் செய்யப்பட்டது இடம் : பரங்கிமலை.