இன்றைய போட்டோ

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக பனி கொட்டி வருகிறது. குறிப்பாக கம்சத்கா தீபகற்பத்தில் பல மாதங்களில் பொழிய வேண்டிய பனி, சில நாட்களிலேயே கொட்டியுள்ளது. இதனால் 16 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது. சில இடங்களில் 9வது மாடி வரை பனி குவிந்திருந்தது.
21-Jan-2026
இன்றைய போட்டோ22-Jan-2026

2/
மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையில் நம் ராணுவத்தின் ரஞ்சித் என்று அழைக்கப்படும் நிலப்பரப்புகளிலும் இயங்கும் ஏடிவி வாகனம் பங்கேற்றது. மணல், சேறு, சதுப்பு நிலம் மற்றும் கரடுமுரடான மலைப்பாதைகள் என எவ்வித கடினமான பாதையிலும் இந்த வாகனம் தடையின்றி இயங்கும்.
22-Jan-2026

3/
புதுடில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டஏஐ எனப்படும், செயற்கை நுண்ணறிவு முறையில் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடியின் பயன்பாடு குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர். கூட்ட நெரிசலிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை இந்த நவீன கண்ணாடி நொடிப்பொழுதில்அடையாளம் கண்டு எச்சரிக்கும் திறன் கொண்டது.
22-Jan-2026

4/

5/
7/

8/

9/

10/

