காவலர் கோதண்டபாணி தனது மகள் பிரதிக்ஷாவிற்கு தவறான சிகிச்சை அளித்தது கால் ஊனமானதால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வரிடம் புகார் அளிக்க வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
அரசு சார்பில் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஒத்திகை நிகழ்ச்சி கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் தேசியக்கொடி ஏந்தி நடனமாடிய பள்ளி குழந்தைகள்.
காரமடை திருமுருக பக்தர்கள் குழு 50 ஆவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக வேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.