குடியரசு தின விழாவை ஒட்டி, டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் முக அடையாளத்தை கண்டறியும் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஊட்டி ஸ்டிபன் சர்ச் வளாகத்திலுள்ள, தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகாம் மெக்ஐவரின் கல்லறையை மனைவி வழி உறவினர்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை அரசு கலை கல்லூரியில் மாணவ, மாணவிகள் அஞ்சல் அட்டை வழியாக கடிதம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.