மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களுக்குப் பின், ஆயுதப்படையைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தன் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார். அதில் தாய்ப்பாசத்துடன் தாய்நாட்டு பாசமும் கலந்திருந்தது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.