தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற ஆறு மாணவர்கள். இடமிருந்து: தினமலர் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சத்யா ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஜான்சன் ஜான் ரோஷன், திருவனந்தபுரம் இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ராஜராஜன், தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன், ராஜலட்சுமி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் அபூர்வா ஹரி மற்றும் மேடிசன் குரூப் முன்னாள் மூத்த துணைத் தலைவர் திவ்யநாதன்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.
முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்
குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.
மேற்குவங்கம் கொல்கட்டாவில் துர்கா பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அங்குள்ள பந்தல் ஒன்றில் சிவபெருமானையும், பார்வதியையும் குறிக்கும் கங்கவுர் எனப்படும் ராஜஸ்தானிய பாரம்பரிய திருவிழாவை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைந்த கலைஞர்.