தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம்இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய வினாடி வினா போட்டியின் மெகா இறுதிப்போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், 4ம் இடம் முதல் 8ம் இடம் வரை பெற்ற மாணவ -மாணவியருக்கு, சைக்கிள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன. இதில், இடமிருந்து வலம்: தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஜஸ்ட் பை சைக்கிள்ஸ் தலைவர் மகேந்திர முல்லத், ஷார்ப் அண்டு தன்னன் நிறுவன பங்குதாரர் விஸ்வநாதன் வைத்தியநாதன், இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் ராஜராஜன், தினமலர் இணை இயக்குநர் ஆர்.சீனிவாசன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிர்வாக இயக்குநர் அபூர்வா ஹரி, சோல் ஏஸ் நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சங்கரநாராயணன் மற்றும் சத்யா ஏஜன்சி நிர்வாக இயக்குநர் ஜான்சன் ஜான் ரோஷன். இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.
மேற்குவங்கம் கொல்கட்டாவில் துர்கா பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அங்குள்ள பந்தல் ஒன்றில் சிவபெருமானையும், பார்வதியையும் குறிக்கும் கங்கவுர் எனப்படும் ராஜஸ்தானிய பாரம்பரிய திருவிழாவை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைந்த கலைஞர்.
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவான துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது வீட்டிற்கு வராதீங்க, அலுவலகத்திற்கு வருமாறு தனது வீட்டின் முன் பேனர் வைத்துள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு நமாமி பாரதம் எனப்படும் பாரதமே உன்னை வணங்குகிறேன் என்ற தலைப்பில் நாடு தழுவிய குழு பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பள்ளியொன்றில் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பயிற்சியில் ஆர்வத்துடனும், தேசபக்தியுடனும் பங்கேற்றனர்.