ஊட்டி நகராட்சியில் பெரும்பாலான வார்டுக்கு பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. மேற்குதொடர்ச்சி மலை நீரோடையில் தண்ணீர் வரத்து காரணமாக மொத்த கொள்ளளவான 60 அடியில் நீர் ததும்பி காணப்படுவதால் கோடையை சமாளிக்கலாம்.
திருவள்ளூர் சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு பழுது அடைந்ததால், இரவு நேரத்தில் அப்பகுதி கும்மிருட்டாக காணப்பட்டது. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உயர்கோபுர மின் விளக்கு சீரமைக்கப்பட்டது.
உத்தரகண்டில் தற்போது பனிப்பொழிவு தீவிரமாக உள்ளது. இதனால் ருத்பிரயாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் மூடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்.
பழங்குடியினரின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் சத்தீஸ்கரின் பஸ்தார்
பகுதியில், கடந்த ஆண்டு முதல் பண்டும் என்ற திருவிழா நடத்தப்படுகிறது.
திருவிழாவில் கலைநிகழ்ச்சியில் பாரம்பரிய உடையில் பங்கேற்ற பழங்குடியின
சிறுமி.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.