தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் மற்றும் சென்னை பல்கலை இணைந்து நடந்தும், 19வது மாநில மகளிர் மேம்பாட்டு கருத்தரங்கில், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், சிறப்பு கையேட்டை வெளியிட்டார்.
தரமணியில் உள்ள மத்திய அரசின் சிஎஸ்ஐஆரின் நிறுவன தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், கண்டுபிடிப்புகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
எல் நினோ தாக்கத்தால் கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழங்கள் வாங்குகிறோம்.. ஆனா அந்த பழங்களை விற்க பாட்டி உச்சி வெயிலேயே சமாளிக்கிறாங்க! இடம்: கோவை, பெரிய கடைவீதி
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நன்மங்கலம் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது
விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ராமையம் பாளையம் அருகே தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.