கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைக் கேட்பு கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பி.வடுகபாளையம் கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வேஸ்ட் டு வொண்டர் ப்ளவர் கார்டன் என்ற சூழலியல் பூங்காவிற்கு வருகை தந்த பள்ளி மாணவர் ஒருவர் பூந்தொட்டியாக மாற்றப்பட்டுள்ள பழங்கால காரின் அழகை ரசித்தார்.