திருநெல்வேலியில் நடந்துவரும் பொருநை புத்தகத் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடுகள் குறித்து முதல் முறை வாக்களிக்கவுள்ள மாணவியர்களுக்கு விளக்கப்பட்டது.
சென்னையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் முதலீடுகளின் முன்னேற்ற அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின். உடன் இடமிருந்து தலைமைச் செயலர் முருகானந்தம், தொழில்துறை அமைச்சர் ராஜா, பாரத் பயோ டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா.இடம் : கிண்டி
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.