கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது அதன் எதிரொலியால் முந்திரி விளைச்சலில் பூ பூத்து குலுங்குகிறது. இடம் குள்ளஞ்சாவடி சாமுட்டி குப்பம்.
திருநெல்வேலி மாவட்டம் பள்ளமடை அருகே பச்சை பசேலென வளர்ந்து வரும் நெல் பயிர்களை பூச்சிகள் தாக்கி விடாமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
குரோம்பேட்டை பஸ்நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடை செய்ய அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள் உடைந்தும் குப்பைகளை கொட்டப்பட்டும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
புதிய யு.ஜி.சி. விதிகளை அமல்படுத்த வலியுறுத்தி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (எஃப்.எஸ்.ஓ.டி.என்) அமைப்பு சார்பில் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் பேரணி சென்றனர்.