சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மாசி மாத ஏழு நாள் தெப்ப உற்சவம் துவங்கியது. முதல்நாளில் ஸ்ரீதேதி, பூதேவி நாச்சியாருடன் பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் வந்து அருள்பாலித்தார்.
மாசி அமாவாசையை முன்னிட்டு, மயான கொள்கை திருவிழா சென்னையின் பல்வேறு அம்மன் கோவில்களில் நடந்தது. காளி வடமிட்டும், எலுமிச்சைப்பழம் உள்ளிட்ட பொருட்களை உடம்பில் குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையை 6000 ரூபாய்ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக சென்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.