உள்ளடக்கத்திற்கு செல்ல புதுச்சேரி காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்ட வாகனங்களை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போக்குவரத்து போலீசார் அகற்றினர் 2/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர். 3/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண். இடம்: கோவை, உக்கடம். 4/
ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 5/
ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள். 6/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர். 7/
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 8/
நீரும் நிலமும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தும் இடமிது. இப்படியும் மனதை கவர்ந்த இடம்: கோவை கிருஷ்ணாம்பதி குளம் பகுதி. 9/
கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மண் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பெண். 10/
விஸ்வசாந்தி மகா யாகத்தையொட்டி, குஜராத்தின் வாத் நகரில் உள்ள ஸ்ரீ ஹாடகேஸ்வரர் கோவிலில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அபிஷேகம் செய்தார்.
மேலும் undefined
மேலும் undefined