புதுவை மாநில கட்டட தொழிலாளர் ஏ.ஐ.டி.யு.சி.,சங்கத்தின் சார்பில் கட்டட தொழிலாளர் நல வாரியம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம் வழங்கிட வேணடும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் தொடர்ந்து 21வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்.எழிலகம் வளாகம்
சாலை விதிகளை மதிப்போம் நலமுடன் வாழ்வோம் என்ற கோசத்துடன் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் சானிட்டோரியும் வரை விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள்
தமிழகத்தில் மின்வாரிய ஊதிய உயர்வு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம்.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள். மீட்டர்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: அண்ணா சாலை அருகே, சென்னை.