சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சதுப்பு நிலத்தில் கலக்கும் இடத்தில் கழிவுகள் காணப்படுகிறது இதனால் சதுப்பு நிலத்தில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இடம் : பள்ளிக்கரணை
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.
மேற்குவங்கம் கொல்கட்டாவில் துர்கா பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அங்குள்ள பந்தல் ஒன்றில் சிவபெருமானையும், பார்வதியையும் குறிக்கும் கங்கவுர் எனப்படும் ராஜஸ்தானிய பாரம்பரிய திருவிழாவை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைந்த கலைஞர்.
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவான துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது வீட்டிற்கு வராதீங்க, அலுவலகத்திற்கு வருமாறு தனது வீட்டின் முன் பேனர் வைத்துள்ளார்.