மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நம் நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து ஒடிஷாவின் புவனேஸ்வரில் மகளிர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.