திருவெண்ணெநல்லூர் அடுத்த பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை அடைக்காததால் வீடு ஜப்தி செய்யப்பட்டது. இதனை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்